பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்ட நிலையில், 18-ஆம் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நிலையில், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபாடு நடத்தினர். இருமுடி கட்டிய பக்தர்கள் 18-ஆம் படி ஏறிய உடன் கொடி மரம் வழியாக நேராக சென்று சாமி தரிசனம் செய்தனர். வழக்கமாக மேம்பாலம் வழியாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்த நிலையில், தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.