கிரிக்கெட் விளையாட்டில் பார்ப்பதற்கு ஃபிட்டாக இருக்கிறோமா என்பதை விட திறமையுடன் விளையாடி அணியின் வெற்றியில் பங்காற்றுகிறோமா என்பதுதான் முக்கியம் என இந்திய கேப்டன் ரோகித் சர்மா விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுவரை 485 போட்டிகளில் விளையாடியுள்ள தாம் ஃபிட்டாக இல்லாமல் போனால், விரைவில் 500 சர்வதேச போட்டிகளில் விளையாடி சாதனை படைக்க முடியாது என்றும் அவர் கூறினார்.