கடைசி வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடாதது வருத்தம் தான் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறினார்.லெஜண்டரி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் சதர்ன் அணிக்கான செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இந்திய அணியின் பயிற்சியாளராகும் ஆசை தற்போதைக்கு இல்லை என்றார்.