இந்தியை ஒரு மொழியாக தாம் எதிர்த்தது இல்லை என திமுக எம்பி கனிமொழிக்கு ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பதிலளித்துள்ளார். மொழிக் கொள்கையில் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாக கூறுவது தவறு என விளக்கமளித்துள்ள அவர், ஒரு மொழியை கட்டாயமாக திணிப்பதும் அல்லது கண்மூடித்தனமாக எதிர்ப்பதும், இவை இரண்டுமே தேசிய ஒருமைப்பாட்டிற்கு உகந்தவை அல்ல என தெரிவித்துள்ளார்.