நடிகர் விஜய் தேவரகொண்டாவும், நடிகை ராஷ்மிகா மந்தனாவும் 3வது முறையாக இணைந்து நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் ஏற்கெனவே கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய இரண்டு படங்களில் இணைந்து நடித்திருந்தனர். இந்த நிலையில், ஷியாம் சிங்கா ராய் பட இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.