டெல்லி சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். ஒரே நாடு ஒரே தேர்தல், புதிய கல்விக் கொள்கை ஆகியவற்றுக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து பிரதமர் மோடியிடம் ஆளுநர் விவரித்ததாக கூறப்படுகிறது.