முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர் மோடியை நேரில் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.பிரதமர் மோடி அமெரிக்கா செல்லும் முன் நிகழ உள்ள இந்த சந்திப்பின் போது, சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் மத்திய அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கல்வி நிதி, இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளுக்கான நிதி ஆகியவற்றை விடுவிக்க முதலமைச்சர் கோரிக்கை விடுப்பார் என சொல்லப்படுகிறது.