நடிகை கஸ்தூரியை தீவிரவாதி போல போலீஸார் நடத்துவது சரியல்ல என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்தார். சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள வஉசி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது பேச்சுக்கு கஸ்தூரி மன்னிப்புக் கேட்ட பிறகும் அரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றம்சாட்டினார்.