டெல்லி, செங்கோட்டையில் வெடித்த ஹுண்டாய் ஐ20 காரை ஓட்டி வந்தது, மருத்துவர் உமர் தான் என்று, டிஎன்ஏ பரிசோதனையில் உறுதியானது. தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட காரை 11 நாட்களுக்கு முன்பு வாங்கிய உமர், குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக சந்தேகிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள அவரது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரிகளை சேகரித்து, காரின் எஞ்சிய உடல் பாகத்துடன் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டது. அதில், காரை ஓட்டி சென்றது அவர் தான் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.