புரட்டாசி மாத பிறப்பை ஒட்டி, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 21ஆம் தேதி வரை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் ஆன்-லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், வழக்கம் போல் கோயிலில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, மாதந்தோறும் குறிப்பிட்ட நாட்களில் திறக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் புரட்டாசி மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டு, வரும் 21ஆம் தேதி வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது. பம்பையில் வருகிற 20ம் தேதி சர்வதேச ஐயப்ப பக்தர் சங்கமம் நடத்தப்படுகிறது. இந்த சங்கமத்தில் வெளிநாட்டு பிரதிநிதிகள் உள்பட 3 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள். மாத பூஜையின் போது, பக்தர்களுக்கு எந்தவித இடையூறுமின்றி பக்தர் சங்கமத்தை நடத்த கேரள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தற்போது 19, 20ஆம் தேதிகளில் சாமி தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு மூலம் 10 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.