காசாவில், இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதலில் 300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் காசா-இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்,இன்னும் விரிவடையும் என பிரதமர் நெதன்யாகு தெரிவித்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.