இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணம் உறுதி செய்யப்பட்டால், கடந்த வாரம் டிரம்ப் பதவியேற்ற பிறகு, வெள்ளை மாளிகையில் அவரைச் சந்திக்கும் முதல் வெளிநாட்டுத் தலைவராக நெதன்யாகு இருக்கக்கூடும்.