பாலஸ்தீனத்தின் மேற்கு கரையை, தங்கள் நாட்டுடன் இணைக்கும் மசோதாவுக்கு இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.'யூதேயா மற்றும் சமாரியாவில் இஸ்ரேலிய இறையாண்மையை பயன்படுத்துதல்' என்று குறிப்பிடப்படும் இந்த மசோதா, மிகக் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் முதற்கட்டமாக இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கிய நிலையில், வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் குழு விவாதத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என கூறப்படுகிறது. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், இஸ்ரேலில் இருக்கும் நிலையிலேயே, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு, அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.