பாலஸ்தீனத்தின் தெற்கில் உள்ள மனிதாபிமான மண்டலத்தின் மீது இஸ்ரேஸ் ராணுவம் நடத்திய தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டதாக காசாவின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. காசாவின் தெற்கு பகுதியில் உள்ள முக்கிய நகரமான கான் யூனிஸில் உள்ள அல்-மவாசி ((Al-Mawasi)) பகுதியில் இஸ்ரேல் ராணுவம் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த பகுதி போரின் ஆரம்பத்தில் பாதுகாப்பு வளையமாக கருதப்பட்டதால் அங்கு பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் தஞ்சம் புகுந்தனர். இதில் அங்குள்ள ஹமாஸ் அமைப்பின் கட்டளை மையத்தை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 40 பேர் பலியான நிலையில், 60 பேர் காயமடைந்தனர்.