ஜம்மு காஷ்மீரை பாகிஸ்தானின் ஒரு பகுதி என்று உலகவரைப்படத்தில் காட்டியதற்கு இந்தியர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் இஸ்ரேல் இராணுவம் மன்னிப்பு கோரியது. ஈரானிடமுள்ள ஏவுகணைகள் அந்நாட்டில் இருந்து எத்தனை ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு சென்று தாக்கும் என உலக வரைப்படத்தை காட்டி இஸ்ரேல் ராணுவப் படை, எக்ஸ்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டது. அந்த உலக வரைப்பட பதிவில், இந்தியாவின் ஜம்மு காஷ்மீர், பாகிஸ்தானின் ஒரு பகுதி என காட்டியதால் இந்தியர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். மூத்த காங்கிரஸ் தலைவர் பவன் கேரா,இஸ்ரேலின் இந்த பதிவை சுட்டிக்காட்டி பிரதமர் மோடிக்கு இது ராஜாங்க ரீதியிலான அவமானம் என சாடினார்.