காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அவசர சிகிச்சைப் பிரிவு நாசமடைந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை காசாவில் உள்ள பிரதான மருத்துவமனை மீது இஸ்ரேலிய ஏவுகணைகள் நடத்திய தாக்குதலுக்கு முன் இஸ்ரேலிய ராணுவத்துடன் தொடர்புடையவர் என அடையாளம் காட்டிக்கொண்ட நபரிடமிருந்த வந்த அழைப்பை அடுத்து நோயாளிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும், அதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.