காசாவின் Jabalia-வில் மருத்துவமனையை குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர். வடக்கு காசாவின் ஜாபாலியா பகுதியில் உள்ள Yemen Al-Saeed மருத்துவமனையில், போரால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி தஞ்சமடைந்தனர். இம்மருத்துவமனையை குறித்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட நிலையில் பலர் காயமும் அடைந்தனர். மேலும் Nablus-இல் நடத்தப்பட்ட தாக்குதலிலும் நான்கு இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.