ஈரான் மீதான தாக்குதலில் முக்கிய கட்டமாக அந்நாட்டில் உள்ள அணுசக்தி நிலையத்தை இஸ்ரேல் தாக்கியுள்ளது. ஈரான்- இஸ்ரேல் நாடுகள் இடையே நிகழ்ந்து வரும் போர் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானில் உள்ள அணுசக்தியை ஒட்டு மொத்தமாக முடக்கும் நோக்கத்தில் இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் முக்கிய கட்டமாக இஸ்பஹான் அணுசக்தி நிலையத்தை இஸ்ரேல் தாக்கியது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.