காசாவில் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த பள்ளிகளை குறி வைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரை கையில் பிடித்து கொண்டு மக்கள் சிதறி ஓடும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் காசா சுகாதார துறை தெரிவித்துள்ளது.