ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை தொடர்ந்து, இஸ்ரேல், ஈரான் மற்றும் ஈராக் வான்வெளியை இந்திய விமானங்கள் தவிர்த்துள்ளன. இதனால் ஏர் இந்தியா உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள் தங்களது 15 க்கும் அதிகமான விமானங்களை மாற்றுப் பாதையில் இயக்குவதாகவும், பல சேவைகள் ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.