ஏமனில் மீண்டும் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு தொடர்புடைய இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் தூண்டுதலே காரணம் என ஏமன் அரசு குற்றம் சாட்டியிருந்த நிலையில், பல பகுதிகள் மீது மீண்டும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தாக்குதல் தொடுத்தது.