ஏமனில் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு தொடர்புடைய இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நேற்று வான்வழி தாக்குதல் தொடுத்தது. இதில் சனாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்திலும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இது தவிர பல துறைமுகங்கள், மின் நிலையங்கள் மற்றும் நாட்டின் இராணுவ நிலைகளும் இஸ்ரேல் தாக்குதலுக்குள்ளாகின. இதில் மொத்தமாக சுமார் 40 பேர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.