இஸ்லாமாபாத்தில் நடத்த தற்கொலை தாக்குதல் குண்டுவெடிப்புக்கு இந்தியாவே காரணம் என்ற பாகிஸ்தான் பிரதமரின் குற்றச்சாட்டுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. ஆப்பாகினிஸ்தானில் இருந்து இந்தியா ஆதரவுடன் குண்டுவெடிப்பு நடந்ததாகவும், பயங்கரவாத அச்சுறுத்தல் முற்றிலுமாக ஒழிக்கப்படும் வரை நாங்கள் போரைத் தொடருவோம் என்றும் பாகிஸ்தான் பிரதமரின் ஷெபாஸ் ஷெரீபின் தெரிவித்திருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த இந்தியா, சுய தோல்விகளை மறைக்க இந்தியா மீது குற்றம் சாட்டுவது பாகிஸ்தானின் தந்திரம் என குற்றம் சாட்டியுள்ளது.