இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு மிகவும் பிடித்த பாடல் குறித்த தகவல் வெளியாகி தமிழர் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவரிடம், தங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எது என கேட்கபட்டது. அதற்கு பதிலளித்த அவர், சிம்புவின் பத்துதல படத்தில் இடம்பெற்ற ”நீ சிங்கம் தான்” பாடல் என்றார்.