தமிழ், தெலுங்கு மட்டுமின்றி இந்திய அளவில் தன்னோட சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அவருக்கென ஒரு தனி இடத்தை பிடித்து தற்போது ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகை சமந்தா. மயோசிடிஸ் எனப்படும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா கடந்த சில மாதங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்தாங்க.தற்போது உடல் நிலை ஓரளவுக்கு தேறிய நிலையில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகியிருக்கும் சமந்தா, பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிப்பில் வெளியாக உள்ள ஜிக்ரா படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில சிறப்பு விருந்தினராக கலந்துகிட்டாங்க. அப்போது நிகழ்ச்சியில சமந்தா குறித்து பேசிய நடிகை ஆலியாபட் சமந்தா படத்தில் மட்டுமில்லாம நிஜத்திலயும் ஒரு நாயகி தான்.அவருடன் இணைந்து படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருப்பதாகவும், திரிவிக்ரம் இயக்கும் படத்தில நானும் சமந்தாவும் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும்" என கூறியிருப்பது தற்போது வைரலாகிட்டு இருக்கு.