மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் கோவை அன்னபூர்ணா உணவு விடுதி உரிமையாளர் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியான நிலையில், மத்திய அரசுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.எக்ஸ் தளத்தில் தமது கண்டனங்களை பதிவு செய்துள்ள அவர், ஜிஎஸ்டி குறித்த தமது கவலையை அன்னபூர்ணா உரிமையாளர் தெரிவித்ததால், அதிகாரத்தில் இருப்பவர்களின் ஈகோ பாதிக்கப்பட்டுவிட்டதாகவும், அப்படி கேட்டதற்காக அவமானப்படுத்தி விட்டதாகவும் ராகுல் காந்தி சாடியுள்ளார்.