இந்துத்துவா அமைப்பினருக்கு, முருகன் தற்போது தான் கண்ணுக்கு தெரிகிறாரா என, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார். அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தை ஒட்டி சென்னை ராஜா அண்ணாமலைபுரம் மணி மண்டபத்தில் உள்ள சிலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களை பிரித்து அரசியல் செய்வது தான் பாஜகவின் நோக்கம் என சாடினார். மேலும், திருப்பரங்குன்றம் மலையை கல்குவாரியாக மாற்ற உத்தரவு பிறப்பித்து இருந்தால் போராட்டத்துக்கு வந்து இருப்பார்களா? என்றும் சீமான் கேள்வி எழுப்பினார்.