சென்னை துறைமுகம் - மதுரவாயல் ஈரடுக்கு உயர்மட்ட சாலை திட்டத்திற்காக கூவம் ஆற்றில் தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு கட்டுமான கழிவுகள் கொட்டப்படுவது மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. நீர்வழித்தடத்தை இடையூறு செய்யும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்த பணிகளை பருவமழை தொடங்குவதற்குள் விரைந்து முடித்து, ஆற்றை தூர்வார வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.