இரண்டாயிரம் ரூபாய்க்கு மேலான யுபிஐ பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி வசூலிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக வெளியான தகவலுக்கு மத்திய நிதி அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சகம், இது மாதிரியான திட்டம் எதுவும் அரசாங்கத்தின் வசம் இல்லை என தெரிவித்துள்ளது.