நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வரும் அக்டோபர் 15ஆம் தேதி நடைபெற உள்ளதாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் சுவர்களில் விளம்பரம் எழுதப்பட்டுள்ளது.தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் வருகிற 23ம் தேதி நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், திடீரென ரத்தானது.மாநாடு நடைபெறும் தேதி குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறும் என விக்கிரவாண்டி அருகேயுள்ள பகுதிகளில் சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டுள்ளது, அக் கட்சித் தொண்டர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.