நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர்-2ல் நடித்து வரும் ரஜினிகாந்த், அடுத்து லோகேஷ் கனகராஜ், நெல்சன், சுந்தர்.சி போன்ற இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது ராஜமௌலியும் இந்த பட்டியலில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆன்மீகத்தை அடிப்படையாக கொண்டு மகேஷ்பாபுவை வைத்து பிரம்மாண்டமான முறையில் ராஜமௌலி திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் மகேஷ்பாபுவின் கதாபாத்திரம் குறித்து ராஜமௌலியிடம் ரஜினிகாந்த் கேட்டறிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.