இந்திய அணிக்கு மிகச்சிறப்பான ஆல்ரவுண்டர் கிடைத்துள்ளதாக இளம் வீரர் நிதிஷ்குமார் ரெட்டியை இந்திய முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர், ஆஸ்திரேலியா போன்ற கடினமான ஆடுகளங்களில் அறிமுகமாகி ரன்களை குவிப்பது எளிதான விஷயமல்ல என்றும், இந்த பாராட்டுகள் நிதிஷ்குமார் சதம் விளாசியதற்காக மட்டுமல்ல என்றும் தெரிவித்தார்.