அமெரிக்காவில் இருந்து ஈரானின் அணுசக்தி நிலையங்களை தாக்க B-2 bombers போர் விமானம், 37 மணி நேரம் இடைவிடாமல் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மிஸோரியில் இருந்து ஈரான் புறப்பட்ட போர் விமானத்திற்கு இடையிடையே நடுவானில் எரிபொருள் நிரப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ரக போர் விமானங்கள் ஃபோர்டோ (( Fordow)) அணுசக்தி நிலையங்கள் போன்று ஆழமாகப் பூமிக்கடியில் இருக்கும் இலக்குகளை அழிக்க வடிவமைக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. இதையும் படியுங்கள் : ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் எதிரொலி... அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பேசும் திட்டம் இல்லை