இரானி கோப்பை போட்டியில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணியின் அபிமன்யு ஈஸ்வரன் ஆட்டமிழக்காமல் 151 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். இரானி கோப்பை கிரிக்கெட் தொடர் உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை தொடங்கிய போட்டியில் மும்பை அணியும், ரெஸ்ட் ஆப் இந்தியா அணியும் மோதி வருகின்றன. முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 141 ஓவர்களுக்கு 537 ரன்கள் எடுத்தது. அதில் சர்பராஸ் கான் 222 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தொடர்ந்து ஆடிய ரெஸ்ட் ஆப் இந்தியா அணி, முதல் இன்னிங்ஸில் 74 ஓவர்களுக்கு 289 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுகளை இழந்தது. அதில் அபிமன்யு ஈஸ்வரன் 151 ரன்களுடனும், துருவ் ஜுரல் 30 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.