இரானி கோப்பை நான்காம் நாள் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணி வீரர் அபிமன்யு ஈஸ்வரன் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்து இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 537 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த ரெஸ்ட் ஆப் இந்தியா அணி 416 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. இதில் அபிமன்யு ஈஸ்வரன் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்து 9 ரன்களில் இரட்டைச் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். அதேபோல் துருவ் ஜுரல் 93 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.