ஐபிஎல் போட்டியில் இன்று நடைபெறும் 41-வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணியும், மும்பை அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. மும்பை அணி நடப்பு தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி அதில் 4-ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 6-வது இடத்தை பிடித்துள்ளது. அதே போல் ஹைதராபாத் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி அதில் 2-ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.