2025ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் இன்று தொடங்குகிறது. சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள அபாடி அல்-ஜோஹர் அரங்கில் இன்றும், நாளையும் இந்த மெகா ஏலம் நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 204 இடங்களுக்கு 574 பேர் பங்கேற்கின்றனர். இதில் 366 பேர் இந்திய வீரர்கள், 208 பேர் வெளிநாட்டு வீரர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.