2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்த ஹர்திக் பாண்டியா நீக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கும் இடையே ஆன அந்த ஒப்பந்தத்தில் அவருக்கு கேப்டன் பதவி அளிக்கப்படும் என்ற உத்தரவாதம் இடம்பெற்று இருந்ததாக பேசப்பட்டது. ஆனால் பிசிசிஐ வட்டாரத்தில் இதுபோன்ற உத்தரவாதத்தை ஒப்பந்தத்தில் சேர்க்க முடியாது என்ற தகவல் கிடைத்தது.