நடப்பு நிதியாண்டின் முதல் 7 மாதங்களில், இந்தியாவில் 10 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 84 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன்கள் தயாரிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் 7 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐ போன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. கடந்த நிதியாண்டில் 14 பில்லியன் டாலர் அளவுக்கு இந்தியாவில் ஐபோன்கள் தயாரிக்கப்பட்டு, அவற்றில் 10 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் IT அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். ஐ போன் உற்பத்திக்கு மத்திய அரசு உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை வழங்குவதால், இந்தியாவில் ஐ போன்களை தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.