சென்னை அசோக்நகர் பெண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசு பள்ளியில் மூடநம்பிக்கை பேச்சாளரை வைத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது குறித்து, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.3 நாட்கள் நடைபெறும் விசாரணை நிறைவடைந்த பின் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.அதனடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசிய மகா விஷ்ணு என்ற நபர், மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து இரு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.