அரசியல் நிலைத்தன்மையற்ற சூழல் நிலவும் வெனிசுலா நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள், பிரேசில் நோக்கி அகதிகளாக தஞ்சமடைய படையெடுத்தனர். குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என ஏராளமானவர்கள் பிரேசிலின் எல்லை Paracaima பகுதியில் மூட்டை, முடிச்சுகளுடன் பிரேசிலில் தஞ்சமடைய காத்திருந்தனர். வெனிசுலா நாட்டில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில், தற்போது அதிபராக இருக்கும் நிகோலஸ் மதுரோ 3ஆவது முறையாக வெற்றி பெற்றார். இந்த நிலையில், தேர்தலில் முறைகேடு நடந்ததாக போராட்டம் வெடித்தது மேற்கித்திய நாடுகளும் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், வெனிசுலா நாட்டு மக்கள் உடமைகளுடன் பிரேசில் நாட்டை நோக்கி தஞ்சமடைந்து வருகின்றனர்.