இன்ஃபினிக்ஸ் நிறுவனம் தனது ஜிடி சீரிசின் புதிய ஸ்மார்ட்போன் ஜிடி 30 ப்ரோவை அறிமுகம் செய்தது. 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போன் 25 ஆயிரம் ரூபாய்க்கும், 12 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போன் 27 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியான ஜிடி 20 ப்ரோவின் மேம்படுத்தபட்ட மாடலாக இது அறிமுகமாகியுள்ளது.