ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய நார்டு பட்ஸ் 3 இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. நார்டு சீரிசில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய இயர்பட்ஸ் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, ப்ளூடூத் 5.4, டூயல் கனெக்ஷன் என ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது. இதன் விலை 2 ஆயிரத்து 299 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.