ஆயுள் காப்பீட்டுத் துறையில் கொடிகட்டி பறக்கும் LIC விரைவில் மருத்துவ காப்பீட்டுத் துறையிலும் நுழைய உள்ளது. ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் மருத்துவ காப்பீட்டு துறையில் நுழைவதற்கான சட்ட திருத்தங்களை மத்திய அரசு செய்ய வேண்டும் என்பதால், அது முடிந்த உடன் எல்ஐசியின் மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பல மேற்கு நாடுகளில் ஆயுள் காப்பீடும், மருத்துவ காப்பீடும் ஒரே நிறுவனத்தால் வழங்க அனுமதி உள்ளது. இந்தியாவிலும் அதற்கான அனுமதி 2016 ஆம் ஆண்டு வரை இருந்தது. அதன் பின்னர் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் மருத்துவ காப்பீட்டை வழங்க கூடாது என IRDAI கட்டுப்பாடு விதித்தது.