மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான UPSC, தனது தேர்வுகளில் பாதுகாப்பை மேம்படுத்த, புதிய டெக்னாலஜியை பயன்படுத்த உள்ளது. TECHNOLOGY என்பது, நாளுக்கு நாள், புதிய பரிமாணத்தில் வளர்ச்சி அடைந்து கொண்டே வருகிறது. அந்த வகையில், இந்த நூற்றாண்டின், AI - ARTIFICIAL INTELLIGENCE, அதாவது செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி நினைத்து பார்க்க முடியாத வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறது. அனைத்து துறைகளிலும், AI பயன்பாடு, அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. மருத்துவம், கல்வி, வணிகம், உற்பத்தி, மீடியா என்று AI-யின் தேவை அதிகரித்துள்ளது. வளர்ந்து வரும் இந்த துறையின் தேவையை கருதி, AI சார்ந்த புதிய படிப்புகளும் அறிமுகமாகி வருகிறது. இப்படி அசுர வளர்ச்சி அடைந்து வரும் AI டெக்னாலஜியை, UPSC பயன்படுத்த உள்ளது. IAS, IPS, IFS உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட அகில இந்திய பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வுகள், பல போட்டித் தேர்வுகளை நடத்தும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான UPSC, தேர்வர்களின் முக அடையாளங்களை உறுதிப்படுத்த, ARTIFICIAL INTELLIGENCE - செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான டெக்னாலஜியை பயன்படுத்த தொடங்கி உள்ளது. ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட தேசிய ராணுவ அகாடமி, கடற்படை அகாடமி & ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகளுக்கான தேர்வுகளை இந்த புது AI TECHNOLOGY, சோதனை முறையில் பயன்படுத்தியது. குறிப்பாக, வட இந்தியாவின் சில தேர்வு மையங்களில் AI தொழில்நுட்பம் மூலம் தேர்வர்களின் புகைப்படங்கள் டிஜிட்டல் முறையில் வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்டது. இந்த புதிய நடைமுறையால், ஒரு தேர்வருக்கான அடையாள சரிபார்ப்பு நேரம் வெறும் 8 - 10 வினாடிகளாக குறைந்திருக்கிறது. இது, தேர்வு பாதுகாப்பில் கூடுதல் உறுதித்தன்மையை அளிப்பதாக கூறப்படுகிறது. தேர்வுகளின் கண்ணியத்தை வலுப்படுத்தவும் தேர்வு மையங்களை தேர்வர்களோட ENTRY EXPERIENCEஐ மேம்படுத்தவும் NATIONAL E-GOVERNANCE உடன் இணைந்து AI தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவாகவும், மிக துல்லியமாவும் செயல்படும் இந்த முக அடையாள சரிபார்ப்பு திட்டத்தை, சிவில் சர்வீசஸ் தேர்வுகள் உட்பட எதிர்கால அனைத்து தேர்வுகளுக்கும் பயன்படுத்த USPC முடிவு செய்துள்ளது. இதற்கான DEVICE PROCUREMENT மற்றும் ஊழியர்களுக்கான பயிற்சி என்று, நிலையான வழிகாட்டு நடைமுறை உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த AI TECHNOLOGY மூலமாக வெற்றிகரமான FACIAL SCANNING செய்யப்பட்டதாகவும், UPSC தனது தேர்வு நடைமுறைகளை நவீனமாக்குவதில் உறுதியாக இருந்தாலும், தேர்வில் ஆள்மாறாட்டம், தேர்வில் முறைகேடு மற்றும் குளறுபடிகளை களைய, வெளிப்படைத் தன்மையான அதிநவீன தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ள உறுதி பூண்டிருப்பதாவும் கூறப்படுகிறது.