மோட்டோரோலா நிறுவனம் FLIP வசதிக் கொண்ட Razr 60 மற்றும் Razr 60 Ultra ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்காவில் அடுத்த மாதம் 15ஆம் தேதி முதல் இந்த போன்கள் விற்பனைக்கு வருகின்றன. இதில் Razr 60 மாடலின் விலை 60 ஆயிரம் ரூபாய் என்றும், Razr 60 Ultraவின் விலை 1 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.