ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வரவாக ஐபோன் 16இ மாடல் அறிமுகமாகியுள்ளது. 59 ஆயிரத்து 900 ரூபாய் என்ற ஆரம்ப விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ஐபோன் 16இ, கறுப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆரம்ப நிலை ஸ்மார்ட்போன் சந்தையை குறிவைத்து ஆப்பிள் களமிறக்கியிருக்கும் இந்த ஐபோன் மாடல், ஆப்பிள் விற்பனையை மேலும் விரிவுபடுத்தும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.