பிரதமர் மோடியுடனான நேர்காணலுக்கு தயாராவதற்காக அமெரிக்காவின் லெக்ஸ் ஃப்ரிட்மேன் தண்ணீர் மட்டும் குடித்து 45 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்ததாக கூறியுள்ளார். கிட்டதட்ட 3 மணி நேரம் பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் நடத்திய நேர்காணல் குறித்து நெகிழ்ச்சி தெரிவித்த லெக்ஸ் ஃப்ரிட்மேன், நேர்காணலின் போது சரியான மனநிலையைப் பெறுவதற்காக இரண்டு நாட்கள் உண்ணாவிரதம் இருந்ததாக கூறி பிரதமரை ஆச்சரியப்படுத்தினார். ஃப்ரிட்மேனின் இந்த செயலுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், உண்ணாவிரதம் இருப்பது மூலம் புலன்கள் கூர்மைப்படுத்தப்பட்டு உணர்வை மேம்படுத்துவதாக கூறியதோடு, அவரது தனிப்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.