நாக்பூர் கலவரத்தால் ஏற்பட்ட சேதங்களுக்கான நஷ்டஈடு கலவரக்காரர்களிடம் இருந்தே வசூலிக்கப்படும் என மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் எச்சரிக்கை விடுத்தார். நாக்பூர் கலவரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக் குழுவினருடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், சேதங்களுக்கான பணத்தை கலவரக்காரர்கள் செலுத்த மறுத்தால் புல்டோசர் நடவடிக்கை எடுக்கவும் தயங்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.