இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலனின் இன்டர்ஸ்டெல்லர் திரைப்படம், இந்திய திரையரங்குகளில் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. 2014 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் கடந்த மாதம் 7ம் தேதி முதல் 14-ம் தேதி வரை இந்திய ஐமேக்ஸ் திரைகளுக்காக மறுவெளியீடு செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் வரும் 14ம் தேதி முதல் 21ம் தேதி வரை மீண்டும் 7 நாட்களுக்கு இந்திய ஐமேக்ஸ் திரைகளில் இப்படம் ரீ-ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.